×

ராசிபுரம் ஒன்றியத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

ராசிபுரம், நவ.29: ராசிபுரம் அருகே, இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். ராசிபுரம் தாலுகா, பொன்குறிச்சி ஊராட்சி பொன்நகரில், இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை, கலெக்டர் உமா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இப்பகுதியில், தற்போது வரை இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறை படுத்தப்பட்ட விவரங்களை கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், காட்டூர் அணைக்கும் கரங்கள் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இப்பள்ளிக்கு அரசால் வழங்கப்படும் நிதி ஆதாரங்கள், செலவினங்கள், பயன்பெறும் குழந்தைகள், குழந்தைகள் கற்றல் திறன் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் (பொ) மகிழ்நன், ராசிபுரம் தாசில்தார் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்
உடனிருந்தனர்.

The post ராசிபுரம் ஒன்றியத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Rasipuram taluk ,Ponkurichi ,Dinakaran ,
× RELATED தபால் பெண் ஊழியரிடம் சங்கிலி பறிப்பு