×

ஏரியில் மண் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல்

தேன்கனிக்கோட்டை, நவ.29: தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெம்பட்டி பகுதியில், எஸ்எஸ்ஐ தமிழ்மணி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே, வாகன தணிக்கை மேற்கொண்டனர். அந்த சமயத்தில் ஆனேக்கல் நோக்கிச் சென்ற டிப்பர் லாரியை நிறுத்துமாறு சைகை செய்தனர். போலீசாரை கண்டதும் லாரியை அப்படியே நிறுத்தி விட்டு, டிரைவர் கீழே குதித்து ஓட்டம் பிடித்தார். இதையடுத்து, அந்த லாரியில் சோதனையிட்டதில் அங்குள்ள ஏரியில் இருந்து 4 யூனிட் மண் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், காவல்நிலையம் கொண்டு சென்று, உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஏரியில் மண் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,SSI Tamilmani ,Kembatti ,Thali ,
× RELATED விவசாயிகள் ஆர்ப்பாட்டம்