×

மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு அணிகள் தேர்வு

கிருஷ்ணகிரி, நவ.29: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள், வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை, மாநிலத்தில் 26 இடங்களில் நான்கு நகரங்களில் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற்ற உள்ளது. தமிழ்நாடு மாநில அளவிலான கூடைப்பந்து, கால்பந்து, கபடி, கோ கோ, வாலிபால், ஹாக்கி ஆகிய அணிகளுக்கு தேர்வு போட்டிகள் நடைபெறுகிறது. தேர்வு போட்டிகள் வரும் 30ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை சென்னையில் பல்வேறு மையங்களில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பவர்கள் 1.1.2005 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு சான்றிதழ் நகல், பிறப்பு சான்றிதழ் நகல்(1.1.2013க்கு முன்னர் பெற்றிருக்க வேண்டும்) வைத்திருக்க வேண்டும்.

சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், கால்பந்து பெண்கள் அணிக்கு வரும் 30ம் தேதி(நாளை) காலை 7 மணிக்கும், ஆண்கள் அணிக்கு 30ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை காலை 7 மணிக்கும் போட்டிகள் நடைபெறும். சென்னை மாவட்ட விளையாட்டு வளாகம், நேரு பார்க்கில் கபடி போட்டி பெண்கள் அணிக்கு நாளை(30ம் தேதி) காலை 7 மணிக்கும், ஆண்கள் அணிக்கு டிசம்பர் 1ம் தேதி காலை 7 மணிக்கும் போட்டிகள் நடைபெறும். சென்னை மாவட்ட விளையாட்டு பார்க்கில், கோகோ போட்டிக்கு பெண்கள் அணிக்கு நாளை(30ம் தேதி) காலை 7 மணிக்கும், ஆண்களுக்கான அணிக்கு டிசம்பர் 1ம் தேதி காலை 7 மணிக்கும் போட்டிகள் நடைபெறுகிறது.

இதேபோல், சென்னை எம்ஆர்கே ஹாக்கி விளையாட்டு அரங்கில், கையுந்து போட்டி, பெண்களுக்கு நாளை(30ம் தேதி) காலை 7 மணிக்கும், ஆண்களுக்கு காலை 7 மணிக்கும் நடைபெறும். இதே அரங்கில், ஹாக்கி போட்டிக்கு பெண்களுக்கு நாளை(30ம் தேதி) காலை 7 மணிக்கும், ஆண்களுக்கு டிசம்பர் 1ம் தேதி காலை 7 மணிக்கும், சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், கூடைப்பந்து போட்டிக்கு பெண்களுக்கு வரும் டிசம்பர் 1ம் தேதி காலை காலை 7 மணிக்கும், ஆண்களுக்கு டிசம்பர் 2ம் தேதி காலை 7 மணிக்கும் தேர்வு போட்டிகள் நடைபெறுகிறது.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு அணிகள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri District Sports and Youth ,Welfare Officer ,Rajagopal ,Tamil Nadu Sports Development ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் பூச்சிக்கொல்லிகளை ரசீது...