கல்வி வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்காக ஜெர்மன்-தமிழ்நாடு பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் பொன்முடி தலைமையில் கையெழுத்து

சென்னை: ஜெர்மன் தூதரகம் வாயிலாக ஜெர்மன்-தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் கார்த்திக், ஜெர்மன் நாட்டின் நகர அமைச்சர் செபாஸ்டின் ஜெம்கோ ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்மூலம் சாக்சோனி நகரத்தில் உள்ள 12 பல்கலைக்கழகங்களுடன், தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை இணைந்து கல்வி வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் செயல்பட உள்ளது.

அதேபோல், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜூம், ஜெர்மன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டிரெஸ்டன் உத்சுலா ஸ்டிரான்சர் ஆகியோரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின்னர் அமைச்சர் பொன்முடி கூறுகையில், நமது உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் திறனை வளர்த்துக் கொள்வதற்கும், வேலைவாய்ப்புகளை பெறுவதற்கும் இந்த ஒப்பந்தம் உதவியாக இருக்கும் என்றார். ஜெர்மன் நாட்டின் சாக்சோனியா மாநில அமைச்சர் செபாஸ்டின் ஜெம்கோ இந்த ஒப்பந்தம் இருவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்றார்.

The post கல்வி வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்காக ஜெர்மன்-தமிழ்நாடு பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் பொன்முடி தலைமையில் கையெழுத்து appeared first on Dinakaran.

Related Stories: