பாஸ்போர்ட் வழங்க கோரி முருகன் வழக்கு

மதுரை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலை யான முரு கன் திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் உள்ளார். இவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘லண்டனில் உள்ள மகளுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். நான் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று நேரடியாக விண்ணப்பிக்க அனுமதிக்குமாறும், எனக்கு பாஸ்போர்ட் வழங்குமாறும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுவிற்கு தமிழ்நாடு பொது (வெளிநாட்டினர்) துறை செயலர், திருச்சி மண்டல பாஸ்ேபார்ட் அலுவலர் உள்ளிட்டோர் தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை டிச. 8க்கு தள்ளி வைத்தார்.

The post பாஸ்போர்ட் வழங்க கோரி முருகன் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: