அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம்: உத்திரமேரூர் எம்எல்ஏ பங்கேற்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, 2 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் திமுக சார்பில் வழங்கப்பட்டது. இதில், சுந்தர் எம்எல்ஏ பங்கேற்றார். உத்திரமேரூர் திமுக ஒன்றிய மற்றும் பேரூர் கழகம் சார்பில், திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 46வது பிறந்தநாள் விழா உத்திரமேரூர் பஜார் வீதியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாரிவள்ளல், செயற்குழு உறுப்பினர் நாகன், மாவட்ட பிரதிநிதி குணசேகரன், கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், பொதுக்குழு உறுப்பினர் பொன்.சசிகுமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, 46 கிலோ அளவிளான பிரமாண்ட கேக்கினை வெட்டி, பொதுமக்களுக்கு வழங்கினார். இதனையடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, 2000 ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேப்போல், உத்திரமேரூர் ஒன்றிய மற்றும் பேரூர் கிளைகள் தோரும் திமுக கொடியினை ஏற்றினார். பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில், திமுக நிர்வாகிகள் அன்புராஜ், வீரமணி, வசந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம்: உத்திரமேரூர் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: