கரூர் மாவட்டத்தில் பணிகள் தொடக்கம் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்க செயலி

*தயக்கமின்றி தகவல் அளிக்க வேண்டும்

*பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

கரூர் : மாற்றுத்திறனாளிகள் தரவுகள்கணக் கெடுப்பது குறித்து விழிப்புணர்வு செயலியை கலெக்டர் வெளியிட்டார்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் சமூக தரவுகள் கணக்கெடுப்பு 2023 குறித்த தொடர்புடைய அரசுத்துறைகள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான விளக்க கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலெக்டா தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் பதிவு செப்டம்பர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் வரை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.முதற்கட்டமாக, 5 மாவட்டங்களில் (சென்னை, கடலூர், திருச்சி, தர்மபுரி மற்றும தென்காசி) சமூக தரவு பதிவு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மீதமுள்ள 33 மாவட்டங்களில் நவம்பர் 29ம்தேதி முதல் சமூக தரவு பதிவு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் சமூகத் தரவு கணக்கெடுக்கும் பணி நேற்று முதல் கரூரில் துவங்கப்பட்டுள்ளது. இந்த பணியை தமிழ்நாடு உரிமைகள் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் மாற்றுத்திறனாளிக்காக பிரத்யேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளையும கணக்கெடுப்பு மேற்கொண்டு, சமூக தரவு தளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கணக்கெடுப்பாளர்களுக்கு சமூக தரவு தளம் பற்றி செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்தும், மாற்றுததிறனாளிகளின் வகைப்பாடுகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது 209 கணக்கெடுப்பாளர்கள் கரூர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி முதன்மை பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த கணக்கெடுப்பினை துவங்குவதற்கு முன்னதாக, மக்கள் மத்தியில் கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள், துண்டு பிரசுரம், பதாதைகள் வைத்தல், ஆட்டோ பிரச்சாரம், தெரு முனைப்பிரச்சாரம், கையெழுத்து இயக்கம் ஆகிய வகைகளில் செய்யப்படவுள்ளது. எனவே, தொடர்புடைய அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் சாரமைப்பு பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவன பிரதிநிதிகள் ஆகிய தங்கள் கணக்கெடுப்பு பணியை கரூர் மாவட்டத்தில் சிறப்பாக நடத்தி முடித்திட முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும்.

மேலும், அதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் நவம்பா 29 முதல் டிசம்பர் 12ம்தேதி வரை நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணிக்கு மகளிர் திட்ட மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணிக்காக உங்கள் இல்லம் தேடி வருவார்கள். கணக்கெடுக்கும பணிக்கு தேவைப்படும் தகவல்களை தயக்கமின்றி வழங்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இந்த கணக்கெடுப்பில் கலந்து கொள்வதன் மூலம் சமூக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சமூக தரவு பதிவுகளில் இடம்பெற மாற்றுத்திறனாளிகளுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும்.
பின்னர், மாற்றுத்திறனாளிகள் சமூக தரவுகள், கணக்கெடுப்பு 2023 குறித்த விழிப்புணர்வு, கையேடு, செயலி, துண்டு பிரசுரம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார். மேலும், மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவுகள், கணக்கெடுப்பு 2023 குறித்த குறும்படமும் காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு கணக்கெடுப்பு 2023 குறித்த விழிப்புணர்வு கையெழுதது இயக்கம் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை கலெக்டர் துவக்கி வைத்தார். மேலும் கலெக்டர் தங்கவேல் மாற்றுத்திறானாளிகள் விழிப்புணர்வு குறித்த பதாகையில் கையெழுத்து இட்டு கையெழுத்து இயக்கத்தையும் துவக்கிவைத்தார்.

இந்த நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சந்திரமோகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அன்புமணி, தமிழ்நாடு உரிமைகள் திட்டம் (உலக வங்கி) மாவட்ட திட்ட அலுவலர் கீதா உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.சமூக தரவுகளில் பதிவிட தொலைபேசி எண்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த தகவல்களை பகிர்ந்து சமூக தரவுகளில் பதிவதற்கு உதவிடுங்கள்.
மேலும், விபரங்கள் தேவை இருப்பினும், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். மேலும், 04324&257130 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

The post கரூர் மாவட்டத்தில் பணிகள் தொடக்கம் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்க செயலி appeared first on Dinakaran.

Related Stories: