சேரி மொழி என நான் கூறிய வார்த்தையில் தவறு இல்லை: நடிகை குஷ்பு பேட்டி

சென்னை: சேரி மொழி என நான் கூறிய வார்த்தையில் தவறு இல்லை என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோம் பிரதான சாலையில் உள்ள நடிகை குஷ்பு வீட்டின் முன்பு காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. சேரி என்ற கூறிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாஜக மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு; சேரி மொழி என நான் கூறிய வார்த்தையில் தவறு இல்லை.

நான் தவறாக பேசவில்லை, மன்னிப்பு கேட்க முடியாது. யாருக்கும் பயந்து நான் பதிவிட்ட பதிவை நீக்க மாட்டேன். சேரி என்ற பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது. என் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினால் தான் விளம்பரம் கிடைக்கும் என்று போராடுகிறார்கள். மணிப்பூர் விவகாரத்தில், முதலில் குரல் எழுப்பியது நான் தான். பல்வேறு இடங்களில் தலித் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர், அங்கெல்லாம் ஏன் போராடவில்லை. தமிழ்நாட்டிற்கு வந்தது முதல், தமிழ் பெண்ணாகவே இங்கே வாழ்கிறேன் இவ்வாறு கூறினார்.

The post சேரி மொழி என நான் கூறிய வார்த்தையில் தவறு இல்லை: நடிகை குஷ்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: