×

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

 

ஈரோடு,நவ. 28: ஈரோட்டில் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டம் பவானி குருப்பநாயக்கன்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்த ஜனார்த்தனன் மகன் சக்திவேல்(35). இவர், கடந்த 6ம் தேதி காரில் 2 டன் ரேஷன் அரிசியை விற்பனைக்காக கடத்தி சென்றதாக ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு,சிறையில் அடைக்கப்பட்டார். சக்திவேல் மீது ரேஷன் அரிசி கடத்தியதாக ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபடும் சக்திவேலை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க கோரி, இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைத்தார். இதனை ஏற்ற கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று சக்திவேலை குண்டர் சட்டத்தில்(கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டம்) அடைக்க உத்தரவிட்டார். இதன்பேரில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சக்திவேல், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை சிறைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினார்.

The post ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Dinakaran ,
× RELATED புகையிலை, மது விற்ற 3 பேர் கைது