×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழையால் நிரம்பி வரும் பெரிய ஏரிகள்

 

காஞ்சிபுரம்: தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 15 பெரிய ஏரிகளில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 909 பொதுப்பணித்துறை ஏரிகளில் 153 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளன. இந்நிலையில், மிகப்பெரிய ஏரிகளான விவசாயத்திற்கும் நீர் ஆதாரத்துக்கும் ஆதாரமாக விளங்கக்கூடிய 15 ஏரிகளின் நீர் கொள்ளளவு மற்றும் இருப்பு விபரம் வருமாறு:  காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட தாமல் ஏரியில் முழு கொள்ளளவு 18 அடி தற்பொழுது, 3 அடி மட்டுமே நீர் நிரம்பியுள்ளது.

வாலாஜாபாத் ஒன்றியம் உட்பட்ட தென்னேரி முழு கொள்ளளவு 18.60 அடி தற்போது 15.80 அடியை எட்டியுள்ளது. உத்திரமேரூர் ஏரியின் முழு கொள்ளளவு 20 அடி தற்போது 18.70 அடி நிரம்பியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஏரி கொள்ளளவு 17.75 அடி தற்போது 14.25 அடி எட்டியுள்ளது. பிள்ளைப்பாக்கம் ஏரி 13.25 அடி தற்போது 12.30 அடி நிரம்பியுள்ளது. மணிமங்கலம் ஏரி 18.60 அடி தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட கொளவாய் ஏரி முழு கொள்ளளவு 15 அடி தற்போது 9 அடி எட்டியுள்ளது. பாலூர் ஏரி முழு கொள்ளளவு 21 அடி தற்போது 10.50 அடி எட்டியுள்ளது. காயார் ஏரி தனது 15.70 முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

அதேபோன்று மானாமதி ஏரியும் 14.11 அடி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சிறுதாவூர் ஏரி தனது 13.70 அடி முழு கொள்ளளவை எட்டியது. அதேபோன்று,  செங்கல்பட்டில் உள்ள கொளவாய் ஏரி முழு கொள்ளளவு 15 அடி தற்போது 9 அடி எட்டியுள்ளது. பொன் விளைந்த களத்தூர் ஏரி முழு கொள்ளளவு 15 அடி தற்போது 9 அடி எட்டியுள்ளது. கொண்டங்கி ஏரி முழு கொள்ளளவு 16 அடி தற்போது 12.3 அடி எட்டியுள்ளது. தையூர் ஏரி முழு கொள்ளளவு 13.09 அடி தற்போது 13.10 எட்டி, 1 அடி உபரிநீர் வெளியாகி வருகிறது. மதுராந்தகம் ஏரி 23.30 அடி தற்போது ஏரி சீரமைக்க பணி நடந்து வருகிறது என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

The post காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழையால் நிரம்பி வரும் பெரிய ஏரிகள் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram, ,Chengalpattu district ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED வெளிமாநில வட்டாட்சியர்களை...