அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் ரூ.2.80 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடம்

பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சியில் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி, 3வது வார்டில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதன் வளாகத்தில் ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஏற்பாட்டில் நடந்தது. மீஞ்சூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ரவி இந்த கட்டிட பணிகளை பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

திமுக ஒன்றிய செயலாளர்கள் வல்லூர் ரமேஷ் ராஜ், காணியம்பாக்கம் ஜெகதீசன், பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், நகரச் செயலாளர் தமிழ் உதயன், பள்ளி தலைமை ஆசிரியர் வேலு, திமுக நிர்வாகிகள் மீஞ்சூர் கோதண்டம், மணிமாறன், மோகன், கதிரவன், கம்யூனிஸ்டு கதிர்வேலு, மீஞ்சூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜெயலட்சுமி தன்ராஜ், சுமதி தமிழ் உதயன், அபூபக்கர், நக்கீரன் ரஜினி, குரு சாலமன், கருணாகரன், தமிழரசன், சுதாகர், கபீர், கவியரசு, வினோத், ரமேஷ், உதயகுமார், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

The post அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் ரூ.2.80 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடம் appeared first on Dinakaran.

Related Stories: