சென்னை: சீனாவில் குழந்தைகளிடையே மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்யும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் சுகாதார அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் நோய் தடுப்பு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று காணொளி காட்சி வாயிலாக அவசர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. புளூ காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சனை ஆகியவற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் கண்டறிந்து அவ்வப்போது வழங்கப்பட்டுள்ள சிகிச்சை குறித்தும் இணையதளத்தில் தினசரி பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
The post காய்ச்சல், சுவாச பிரச்சனையால் பாதிக்கப்படும் நோயாளிகளை கண்டறிந்து தினசரி பதிவு செய்ய வேண்டும்; சீன காய்ச்சல் எதிரொலி: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு appeared first on Dinakaran.