₹23.57லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட செம்மறிக்குளம் ஊராட்சி அலுவலகம்

*அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

உடன்குடி : ₹23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட செம்மறிக்குளம் ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிடத்தை அமைச்சர் அனிதாராதா கிருஷ்ணன் திறந்து வைத்தார்.
உடன்குடி யூனியன் செம்மறிக்குளம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ₹23.57லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர் அகஸ்டா மரியதங்கம் தலைமை வகித்தார்.

யூனியன் சேர்மன் பாலசிங், திருச்செந்தூர் ஆர்டிஓ குருசந்திரன், தாசில்தார் வாமனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சிராணி, சுடலை, மாவட்ட கவுன்சிலர் ஜெசிபொன்ராணி, செம்மறிக்குளம் பஞ்சாயத்து துணைத்தலைவர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக தமிழக மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் பங்கேற்று புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

விழாவில் திமுக மாநில வர்த்தக அணி துணை செயலர் உமரிசங்கர், உடன்குடி கிழக்கு ஒன்றியசெயலர் இளங்கோ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட பிரதிநிதி ராஜாபிரபு, பேரூராட்சி கவுன்சிலர்கள் அஸ்ஸாப், ஜான்பாஸ்கர், செட்டியாபத்து பஞ்சாயத்து பாலமுருகன், ஒன்றியதுணைச்செயலாளர் சுடலைக்கண், கிளை நிர்வாகிகள் விஜயன், தினகரன், கோபாலகிருஷ்ணன், முத்துசாமி, ரூபன், ராஜேந்திரன், நோவாகிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ஜார்ஜ்செல்வின் சகாயம் நன்றி கூறினார்.

The post ₹23.57லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட செம்மறிக்குளம் ஊராட்சி அலுவலகம் appeared first on Dinakaran.

Related Stories: