×

திருப்பதி- விழுப்புரம் ரயில் சேவையில் மாற்றம் தென்னக ரயில்வே அறிவிப்பு நாளை முதல் டிசம்பர் 3ம் தேதி வரை

வேலூர், நவ.26: திருப்பதி-விழுப்புரம்-திருப்பதி ரயில் சேவையில் மாற்றம் செய்து தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தென்னக ரயில்வேயின் தென்மத்திய ரயில்வே பிரிவில் குண்டக்கல் டிவிஷனில் நடந்து வரும் பராமரிப்புப்பணிகள் காரணமாக திருப்பதி-விழுப்புரம், விழுப்புரம்-திருப்பதி ரயில் சேவையில் அவ்வப்போது மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி, தற்போது புதிய அறிவிப்பை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட்டு செல்லும் வண்டி எண் 16854 விழுப்புரம்-திருப்பதி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது. அதேபோல் மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் வண்டி எண் 16853 முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது. இந்த ரயில் மாலை 4.30 மணியளவில் காட்பாடியில் இருந்து திருப்பதி நோக்கி செல்லும். இந்த மாற்றம் 27ம் தேதி(நாளை) தொடங்கி டிசம்பர் 3ம் தேதி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post திருப்பதி- விழுப்புரம் ரயில் சேவையில் மாற்றம் தென்னக ரயில்வே அறிவிப்பு நாளை முதல் டிசம்பர் 3ம் தேதி வரை appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Villupuram ,Southern Railway ,Vellore ,South Central Railway ,-Villupuram ,
× RELATED சத்துணவு மையங்களில் கலவை சாதம்...