×

குட்கா பாக்கெட்டுகள் பதுக்கி விற்ற கணவன், மனைவி கைது

வேலூர், ஜன.7: காட்பாடியில் குட்கா, ஹான்ஸ் பாக்கெட்டுகளை பதுக்கி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து 2.6 கிலோ புகையிலை பொருட்களை கைப்பற்றினர். காட்பாடி சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், குமார் ஆகியோர் தலைமையில் காட்பாடி போலீசார் நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் வடுகன்குட்டை, ஜாப்ராபேட்டை பகுதிகளில் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் வடுகன்குட்டை சுமித்ரா(44) என்பவரது மளிகை கடையில் தடை செய்யப்பட்ட 1 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகள், கூல் லிப் பாக்கெட்டுகள் 700 கிராம், பான்மசாலா பாக்கெட்டுகள் 200 கிராம், விஐ டெபோக்கோ பாக்கெட்டுகள் 200 கிராம் என மொத்தம் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 2.6 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனை சுமித்ரா அவரது கணவர் கார்த்திகேயன்(56) மூலம் அண்டை மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து பதுக்கி விற்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கார்த்திகேயன், சுமித்ரா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vellore ,Katpadi ,Katpadi Sub ,Manikandan ,Kumar ,
× RELATED சீட்டு பணத்தை திருப்பித்தராமல் நாயை...