14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி, நவ. 25: கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு வருவாய் கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கம் சார்பில் நேற்றுமுன்தினம் மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், பதவி உயர்வு வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மாற்று திறனாளிகளுக்கு 2,500 பயணப்படி வழங்க வேண்டும், கிராம உதவியாளர் பணிக்கு வாரிசு வேலை வழங்கவேண்டும் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கிராம உதவியாளர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவி, மாவட்ட பொருளாளர் குணசேகர், வட்ட பொருளாளர் சுரேஷ்குமார், பொன்னேரி வட்ட தலைவர் ரவிக்குமார், வட்ட செயலாளர் குமாரசாமி, வட்ட பொருளாளர் சுகன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை பணியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். புழல்: மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்றுமுன்தினம் மாலையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்ட தலைவர் செல்லப்பா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கணேசன், நிர்வாகிகள் சுந்தரம், ரஞ்சித் குமார், ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதவரம் வட்டத்தில் உள்ள வருவாய் கிராம ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

The post 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: