×

திருச்சியில் இன்று இளைஞர் திறன் விழாவுடன் வேலை வாய்ப்பு முகாம்

 

திருச்சி,நவ.25: திருச்சியில் இன்று இளைஞர் திறன் விழாவுடன் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 18 வயது பூர்த்தியடைந்த, குறைந்த பட்சம் 8வது, 10வது, ஐடிஐ, டிப்ளமோ, 12வது, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பெற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் அவரவர்களின் தகுதிக்கேற்ப, தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளித்திட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் இளைஞர் திறன் திருவிழாவுடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் இன்று துறையூர் சுதர்ஷனா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறுகிறது.

இம்முகாமில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதால், திருச்சி மாவட்டம் மற்றும் இதர பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். பங்கேற்பவர்கள் சுயவிவரம், கல்வித்தகுதி, இருப்பிடச்சான்று, புகைப்படம் மற்றும் இதர சான்றிதழ்களின் நகலுடன் நோில் வர வேண்டும். மேலும், இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியரகம், திருச்சி என்ற முகவாியில் நோிலோ அல்லது 0431-2412726 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு மேற்படி வேலைவாய்ப்பு முகாம் குறித்த தகவல்களை பெறலாம். இவ்வாறு அவர் தொிவித்துள்ளார்.

The post திருச்சியில் இன்று இளைஞர் திறன் விழாவுடன் வேலை வாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Youth Skills Festival ,Trichy ,Youth Skill Festival ,District Collector ,Pradeep Kumar ,Dinakaran ,
× RELATED மின் கசிவால் அசைவ உணவகத்தில் தீ விபத்து