அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுத்து பார்த்ததில் மூளையில் ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டு அதற்கான தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மூளைச் சாவு அடைந்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். பார்த்திபனின் தாயார் மற்றும் அவரது உறவினர்களிடம் உடலுறுப்பு தானம் பற்றி சொன்னவுடன், பார்த்திபனின் தாயார் தனது மகன் உயிர் இப்போது பிரிந்திருந்தாலும், அவனது உடலுறுப்புகள் வேறு பலரின் மூலம் வாழ்வது எனக்கு நிறைவைத் தருகிறது என்று கூறி உடலுறுப்பு தானத்திற்கு அனுமதித்திருக்கிறார்.
பார்த்திபனின் கல்லீரல், 2 சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் தோல் ஆகியவை பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கடந்த இரண்டு மாதங்களில் 30வது மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து உடலுறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளது. இது இந்திய வரலாற்றில் அல்ல. உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனை. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 3,315 பேர் உடலுறுப்பு தானம் செய்வதற்கு பதிவு செய்திருக்கிறார்கள் உடலுறுப்புகளுக்காக காத்திருக்கிறார்கள்’’ என்றார்.
The post உறுப்பு தானம் செய்த இளைஞருக்கு அரசு மரியாதை தமிழ்நாடு முழுவதும் 3,315 பேர் உடலுறுப்பு தானம் செய்ய பதிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.
