அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் தீவிர பாதிப்பு ஏற்படும்: மருத்துவ அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

சென்னை: ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த 22ம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை குறித்த அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: மூளைக்கான எம்ஆர்ஐ பரிசோதனையில் வலது புறத்தில் க்ரோனிக் லக்யுனே இன்ஃபார்ட் கண்டறியப்பட்டுள்ளது. முதுகெலும்பில் வீக்கம் காணப்படுகிறது. பித்தப்பையில் கற்கள் உள்ளன.

செந்தில் பாலாஜியின் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் கால்சிய படிவ அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால் ரத்த கொழுப்பை அதிகப்படுத்தி மாரடைப்பு ஏற்படும். மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் சில பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதற்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால், அவர் கோமா நிலைக்கு செல்லும் அபாயமும் உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் தீவிர பாதிப்பு ஏற்படும்: மருத்துவ அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: