சேலம், நவ.22: சேலம் அருகே செய்யாத வேலையை செய்ததாக கூறி 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த முறைகேடு புகாரில் மாஜி.பஞ்சாயத்து தலைவர் உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம் மேச்சேரி பக்கமுள்ள புக்கம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 2011ம்ஆண்டு முதல் 2016ம்ஆண்டுக்குள் நடந்த நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஆதாரத்துடன் ரகசிய தகவல் வந்தது. குறிப்பிட்ட காலக்கட்டத்தில் லைப்லைன், போர்வெல் போடாமல் போட்டதாக பில் எழுதப்பட்டு ₹30 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்தது.
இதுதொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தியதில் முறைகேட்டில் உண்மை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார், பஞ்சாயத்து செயலாளர் சக்திவேல் மீதும், காசோலைக்கான அதிகாரத்தை வைத்து அதில் கையெழுத்திட்ட அப்போதைய தலைவர் மணியரசன், துணைத்தலைவர் கணேசன் ஆகியோர் மீதும் இன்ஸ்பெக்டர் நரேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post மாஜி பஞ்.தலைவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு appeared first on Dinakaran.
