ஆனால், சந்தால் என அழைக்கப்படும் பழங்குடியினத்தை சேர்ந்த அந்தபெண்ணின் சமூகத்தை சேர்ந்தவர்கள், பெண்ணுக்கு ஒரு ஆண் மாலை அணிவித்ததால் அதை திருமணமாக கருதினர். இதனால் அந்த பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டனர். அவர் வேலை பார்த்து வந்த தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனிலும் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன்பின்னர் ஜார்க்கண்டிற்கு குடி பெயர்ந்த புத்னி, சுதிர் தத்தா என்பரை மணந்து கொண்டார். தற்போது 80 வயதான புத்னி கடந்த 17ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
The post நேருவின் மனைவி என பழங்குடியினரால் ஒதுக்கப்பட்ட பெண் மரணம் appeared first on Dinakaran.
