நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ச.ம.கழகம் ஆதரவு

சென்னை: சமத்துவ மக்கள் கழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தண்டையார்பேட்டையில் நடந்தது. நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சூலூர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து வரவேற்றார். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு தெரிவித்து, தொண்டர்கள் தீவிர தேர்தல் பணியாற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் இளைஞரணி செயலாளர் கார்த்திக், நிர்வாகிகள் முனீஸ்வரன், விஸ்வநாதன், விநாயகமூர்த்தி, வில்லியம்ஸ், சீனிவாசன், அருண்குமார், ராஜலிங்கம், மதுரைவீரன், ஸ்ரீராம், கணேசன், பால்ராஜ், ராஜேஷ், செல்வகுமார், சாபுதீன், முத்துக்குமார், செல்வகுமார், ரமேஷ் கண்ணா, பாலசுப்பிரமணி, அவினாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ச.ம.கழகம் ஆதரவு appeared first on Dinakaran.

Related Stories: