எந்த மறைமுக உறவும் கிடையாது; அதிமுக- பாஜக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம்: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

தர்மபுரி: பாஜகவுடன் அதிமுகவுக்கு மறைமுக உறவு இல்லை. அந்த கட்சியுடன் கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம் என்று தர்மபுரியில் நடந்த திருமண விழாவில், எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறினார். தர்மபுரியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், 100 ஏழை ேஜாடிகளுக்கு திருமணம் இன்று நடந்தது.

இதில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது:
அதிமுக ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. அதிமுக-பாஜக இடையே மறைமுகமாக உறவு இருப்பதுபோல் சிலர் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு இல்லை. பாஜக-அதிமுக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டோம். அதிமுக ஆட்சியில் தான் தர்மபுரியில் அதிக திட்டங்கள் நிறைவேற்றியுள்ளோம். பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா கிளினிக், அம்மா ஸ்கூட்டர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக தான்.

கிராமப்புற ஏழை மாணவர்கள் படிப்புக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில் தான். பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட பொங்கல் தொகுப்பு கொண்டு வந்தோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றி பெறுவோம். இவ்வாறு எடப்பாடி பேசினார்.

The post எந்த மறைமுக உறவும் கிடையாது; அதிமுக- பாஜக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம்: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: