முதல்வர் கொண்டுவந்த தனி தீர்மானத்துக்கு சதன் திருமலைக்குமார், தளி ராமச்சந்திரன், சி.பி.எம்.நாகை மாலி உள்பட தலைவர்கள் வரவேற்பு..!!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்த நிலையில், அதிமுக ஆட்சியில் 2, திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள் என 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக குறிப்பிட்டு ஆளுநர் கடந்த 13ம் தேதி அதை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் ஆளுநர் அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று தொடங்கப்பட்டது. சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது . ஆளுநர் நிராகரித்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் கி.வேணு, பி.வெங்கடசாமி, பா.வேல்துரைக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார், விடுதலைப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் தெரிவிக்கப்பட்டது.  மேலும் 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் அதை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகினறனர்.

நல்ல ஆலோசகர்களை வைத்து ஆளுநர் செயல்பட வேண்டும்: சதன் திருமலைக்குமார்

நல்ல ஆலோசகர்களை வைத்து ஆளுநர் செயல்பட வேண்டும் என சதன் திருமலைக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் முடிவை ஏற்று செயல்படத் தவறிய ஆளுநர் பதவி விலகிச் செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஆளுநரை கருவியாக வைத்துக் கொண்டு மாநில அரசு முடக்கி வருகிறது ஒன்றிய அரசு: தளி ராமச்சந்திரன்

ஆளுநரை கருவியாக வைத்துக் கொண்டு மாநில அரசு முடக்கி வருகிறது ஒன்றிய அரசு என தளி சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆளுநர்கள் என்பவர்கள் ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆளுநர் அலுவலகத்தை ஆர்.எஸ்.எஸ். அலுவலகமாக மாற்றி செயல்பட்டு வருகிறார். ஆளுநர் ஆர். என்.ரவி தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். மாநில அரசுகளின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் செயல்படும் ஆளுநரை குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டும்.

பாஜக அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார் ஆளுநர் ரவி : சி.பி.எம்.நாகை மாலி

ஜனநாயக மாண்புகளை புறந்தள்ளிவிட்டு செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி போல் எந்த மாநிலத்திலும் ஆளுநர் இல்லை என சி.பி.எம்.நாகை மாலி தெரிவித்துள்ளார். எந்தவித அதிகாரமும் இல்லாத ஒருவர் சகலவிதமான அதிகாரத்தையும் கையில் எடுப்பேன் என்பதை இனிமேலும் அனுமதிக்கக் கூடாது. பாஜக அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார் ஆளுநர் ரவி.

அம்பேத்கர் பேசியதை முதல்வரின் பேச்சு நினைவூட்டியது: சிந்தனைச் செல்வன்

தேசம் பெற்ற சுதந்திரத்தை இழந்து விடுவோமோ என்ற 1949ல் அம்பேத்கர் பேசியதை முதல்வரின் பேச்சு நினைவூட்டியது என சட்டப்பேரவை உறுப்பினர் சிந்தனைச் செல்வன் தெரிவித்துள்ளார். 10 மசோதாக்களையும் திருப்பி அனுப்பும் தனித் தீர்மானத்தக்கு வி.சி.க வரவேற்பு தெரிவித்தது. அரசியல் அமைப்பு சாசனத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதை முதலமைச்சர் தைரியமாக எதிர்கொள்கிறார். அம்பேத்கர், பெரியா, அண்ணா, கலைஞர். காமராஜா பெயரை உச்சரிக்க ஆளுநருக்கு மனமில்லை.

The post முதல்வர் கொண்டுவந்த தனி தீர்மானத்துக்கு சதன் திருமலைக்குமார், தளி ராமச்சந்திரன், சி.பி.எம்.நாகை மாலி உள்பட தலைவர்கள் வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: