உடை மாற்றும் பாலிவுட் நடிகை கஜோல் வீடியோ: டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் அடுத்த அதிர்ச்சி!

டெல்லி : நடிகை ராஷ்மிகாவை தொடர்ந்து பாலிவுட் நடிகை கஜோல் டீப் ஃபேக் வீடியோவால் பாதிக்கப்பட்டுள்ளார். வேறுறொரு பெண் உடை மாற்றும் வீடியோவில் கஜோல் முகத்தை டிஜிட்டல் முறையில் மாற்றி விஷமிகள் டிக் டாக்கில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து அதன் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் நடிகை கஜோல் இருக்கும் வீடியோ ஏஐ தொழில்நுட்பம் மூலம் முகமாற்றம் செய்யப்பட்ட டீப் ஃபேக் என தெரியவந்தது. இந்த மாத தொடக்கத்தில் நடிகை ராஷ்மிக்கா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்துவதற்கு திரையுலக பிரபலங்கள் அமிதாப் பச்சன், நாகா சைத்தானியா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், பீகாரைச் சேர்ந்த 19 வயது இளைஞரிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், நடிகை கஜோலின் டீப் ஃபேக் வீடியோ பரவி திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனிடையே டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் போலி வீடியோ தயாரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

The post உடை மாற்றும் பாலிவுட் நடிகை கஜோல் வீடியோ: டீப் ஃபேக் தொழில்நுட்பத்தில் அடுத்த அதிர்ச்சி! appeared first on Dinakaran.

Related Stories: