தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 22 லட்சம் தீபம் ஏற்றி சாதனை

அயோத்தி: அயோத்தியில் தீபோத்சவ் திருவிழாவில் 22 லட்சம் தீபங்கள் ஏற்றி சாதனை படைக்கப்பட்டது. உபியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜ ஆட்சி அமைந்த பின்னர் அயோத்தியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று தீபோத்சவ் என்ற பெயரில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தீபோத்சவ் விழாவையொட்டி அயோத்தியில் கலாசார ஊர்வலம் நேற்று நடந்தது. இந்த ஆண்டு 22 லட்சம் தீபங்கள் ஏற்றி உலக சாதனை படைக்கப்பட்டது’’ என்றார். தீபோத்சவ விழாவில் கலந்து கொள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அயோத்திக்கு வந்தார். தீபோத்சவ திருவிழாவை அவர் தொடங்கி வைத்தார். இதனால், அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

* அதிகரிக்கும் தீபங்கள் எண்ணிக்கை

அயோத்தியில் கடந்த 2017ல் 51 ஆயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டன.2019ல் இது 4.10 லட்சமாக அதிகரித்தது. 2020ல் 6 லட்சமாகவும்,2021ல் 9 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை ஏற்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு மொத்தம் 17 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன. ஆனால்,5 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் எரிந்த விளக்குகள் மட்டும் கணக்கில் சேர்க்கப்படும் என கின்னஸ் நிறுவனம் அறிவித்தது. அதன்படி 15.76 லட்சம் தீபங்கள் மட்டும் சாதனை புத்தகத்தில் சேர்க்கப்பட்டது.

The post தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் 22 லட்சம் தீபம் ஏற்றி சாதனை appeared first on Dinakaran.

Related Stories: