இதனிடையே உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில் அண்மையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, “இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்புக்குப் பின் உடல் உறுப்பு தான விருப்பப் பதிவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணைய செயலாளர் கோபாலகிருஷணன் தெரிவித்துள்ளார்.
உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த 5 வாரங்களில் 2,700-ஐ தாண்டியது என்று கூறிய அவர், ஒரு மாதத்திற்கு சுமார் 100 உடல் உறுப்பு தான விருப்பப் பதிவுகள் மட்டுமே பெறப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்குப் பிறகு, உறுப்பு தானம் பற்றிய மக்களின் எண்ணம் நேர்மறை மாற்றத்தைச் சந்தித்துள்ளது என்றார்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு பின் உடல் உறுப்பு தானத்துக்கான பதிவு 27 மடங்கு அதிகரிப்பு!! appeared first on Dinakaran.
