எரிவாயு சிலிண்டருக்கு 500 மானியம் விவசாய கடன் தள்ளுபடி, கேஜி முதல் பிஜி வரை இலவச கல்வி: சட்டீஸ்கர் காங். தேர்தல் அறிக்கை

ராய்பூர்: சட்டீஸ்கர் தேர்தலுக்கான காங்கிரஸ் அறிக்கையில் 500 மானிய விலையில் சமையல் எரிவாயு, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. சட்டீஸ்கர் மக்களுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் நேற்று வௌியிட்டது. ராஜ்நந்த்கான் பகுதியில் தேர்தல் அறிக்கையை முதல்வர் பூபேஷ் பாேகல் வௌியிட்டார். காங்கிரசின் தேர்தல் அறிக்கையில், 500 மானிய விலையில் எரிவாயு சிலிண்டர், விவசாயிகள் கடன் தள்ளுபடி, சாதிவாரி கணக்கெடுப்பு, மழலையர் வகுப்பு முதல் முதுநிலை வரை இலவச கல்வி, நெல் குவிண்டாலும் 3,200க்கு கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் அறிக்கையை வௌியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பூபேஷ் பாகேல், “இலவச எரிவாயு சிலிண்டருக்கான மானியம் மகளிர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். சட்டீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்து கொண்டால் தற்போது செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் தொடரும்” என்றார்.

The post எரிவாயு சிலிண்டருக்கு 500 மானியம் விவசாய கடன் தள்ளுபடி, கேஜி முதல் பிஜி வரை இலவச கல்வி: சட்டீஸ்கர் காங். தேர்தல் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: