ஆந்திரா, சட்டீஸ்கர், அரியானா உட்பட 7 மாநிலங்கள் உருவான நாள் கொண்டாட்டம்: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி: ஆந்திர பிரதேசம், சட்டீஸ்கர், அரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவு, புதுச்சேரி யூனியன் பிரதேசங்கள் நவம்பர் ஒன்றாம் தேதி உருவாக்கப்பட்டது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் உருவான நாளை அம்மாநில மக்கள் கொண்டாடி வருகின்றனர். மாநிலங்கள் உருவான நாளையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மூ அம்மாநில மற்றும் யூனியன் பிரதேச மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேபோல் பிரதமர் மோடியும் ஒவ்வொரு மாநில மக்களுக்கும் தனித்தனியாக சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் வளர்ச்சியின் புதிய உச்சங்களை தொட்டு வரும் மத்தியப்பிரதேசம், அமிர்த காலத்தில் நாட்டின் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றது, சட்டீஸ்கர் மாநிலத்தின் புகழ்பெற்ற பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் அனைவரையும் ஈர்க்கிறது. இயற்கை மற்றும் கலாச்சார மகத்துவம் நிறைந்த சட்டீஸ்கருக்கு பிரகாசமான எதிர்காலத்தை நான் விரும்புகிறேன் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

The post ஆந்திரா, சட்டீஸ்கர், அரியானா உட்பட 7 மாநிலங்கள் உருவான நாள் கொண்டாட்டம்: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: