ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான ரவுடி கருக்கா வினோத்துக்கு நவ.15ம் தேதி வரை நீதிமன்ற காவல்

சென்னை: ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான ரவுடி கருக்கா வினோத்துக்கு நவம்பர் 15ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 3 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கருக்கா வினோத்தை போலீஸ் ஆஜர்படுத்தியது. பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் குறித்து சுருக்கா வினோத்திடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.

கடந்த 25-ம் தேதி கவர்னர் மாளிகை நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கிண்டி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, புழல் சிறை அதிகாரிகள் பலத்த போலீஸ் காவலுடன் கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் 9-வது அமர்வு பொறுப்பு நீதிபதி சந்தோஷ் முன்பு ஆஜர்படுத்தினர். கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரித்தால்தான் பெட்ரோல் குண்டு வீசியதற்கான காரணம் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதன்படி ரவுடி கருக்கா வினோத்தை நவம்பர் 1-ம் தேதி வரை(இன்று வரை) போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 3 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலையில் கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் 9வது அமர்வு பொறுப்பு நீதிபதி சந்தோஷ் முன்பு ஆஜர்படுத்தினர் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ரவுடி கருக்கா வினோத்துக்கு நவம்பர் 15ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான விவரங்களை போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

The post ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான ரவுடி கருக்கா வினோத்துக்கு நவ.15ம் தேதி வரை நீதிமன்ற காவல் appeared first on Dinakaran.

Related Stories: