திருப்பூர், நவ.1: திருப்பூர் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் கடந்த செப்டம்பர் 3ம் தேதி விவசாய நிலத்தில் அமர்ந்து மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட விவகாரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பாஜ நிர்வாகி மோகன்ராஜ் (49), அவரது தாய் புஸ்பவதி (67), அத்தை ரத்தினம்மாள் (58), பெரியப்பா மகன் செந்தில்குமார் (47) ஆகியோர் 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மணப்பாறை வையம்பட்டியை சேர்ந்த செல்லமுத்து (24), திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகிபுரத்தை சேர்ந்த ஐயப்பன் (52), அவருடைய மகன்கள் குட்டி (எ) வெங்கடேஷ் (எ) ராஜ்குமார் (27), செல்வம் (எ) வெங்கடேஷ் (29), உத்தமபாளையம் சோனைமுத்தையா (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் புலன் விசாரணை முடிந்து சாட்சியங்களுடன் பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 5 பேர் மீது 800 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை டிஎஸ்பி சவுமியா நேற்று தாக்கல் செய்தார்.
The post பல்லடம் அருகே 4 பேர் கொலை 800 பக்க குற்றப்பத்திரிகை: நீதிமன்றத்தில் தாக்கல் appeared first on Dinakaran.