பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ் முதல்வருக்கு தொமுச பேரவை நன்றி

சென்னை: பொதுத்துறை ஊழியர்களுக்கான தீபாவளி போனஸாக 20% அறிவித்தமைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தொ.மு.ச பேரவை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. தொ.மு.ச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மிகவும் மோசமான நிதி நெருக்கடியை சந்தித்திருந்த போதிலும் ஒன்றிய அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் ஊதியம் வழங்க முடியாத சூழ்நிலையில் இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் முதல்வரின் அறிவுத் திறன்மிக்க ஆட்சியில் பொதுத்துறை ஊழியர்கள் கோரிக்கைகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன.

குறிப்பாக ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் போனஸ் வழங்குவதில் குறைபாடுகள் இருந்தாலும் இந்த ஆண்டு அதை அத்தனையையும் நீக்கி மனநிறைவு ஏற்படும் வகையில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 20% போனஸ் அறிவித்த முதல்வருக்கு தொ.மு.ச. பேரவையின் இணைப்புச் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல் சில விடுபட்ட துறைகள் இருந்தால் அவற்றுக்கும் விரைவில் அறிவிப்பு வரும் என்ற உறுதியை அளித்துள்ளதற்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். அதன்படி, 20% போனஸை பெற்றிருப்பதற்கு உதவிகரமாக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ் முதல்வருக்கு தொமுச பேரவை நன்றி appeared first on Dinakaran.

Related Stories: