பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதுவோரில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்; பள்ளிக்கல்வித்துறை அரசாணை..!!

சென்னை: பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதுவோரில் ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் அறிவிக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கோரிக்கையை பரிசீலித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் இருந்து டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பலரும் தங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பல்வேறு பணிகளில் சேர முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்திருந்தார்கள். சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்று பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது மீண்டும் அவர்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது.

அப்போது, தமிழில் அவர்கள் தேர்ச்சி பெறவேண்டியது கட்டாயமாக உள்ளது. 40 மதிப்பெண் எடுக்க வேண்டும். இந்த நிலையில், பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதுவோரில் ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் அறிவிக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வு மதிப்பெண்களுடன் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* 2012 டெட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 5.5 மதிப்பெண்கள் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படும்.

* 2013-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 5 மதிப்பெண்.

* 2014-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 4.5 மதிப்பெண் வழங்கப்படும்.

* 2017-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

* 2019 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2 மதிப்பெண் வழங்கப்படும்.

2022-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 0.5 வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2,222 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஜனவரி 7ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.

The post பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதுவோரில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்; பள்ளிக்கல்வித்துறை அரசாணை..!! appeared first on Dinakaran.

Related Stories: