ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை 58ஆக உயர்த்தியது வரவேற்கத்தக்கது: பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை 58ஆக உயர்த்தியது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தேர்வில் வெற்றி பெற்று பணிக்காக காத்திருக்கும் பட்டதாரிகள் கோரிக்கையை ஏற்று அரசு நடவடிக்கை எடுத்ததற்கு ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டி தேர்வை கட்டாயமாக்கும் அரசாணை எண் 149 ஐ அரசு ரத்து செய்க எனவும் அதற்கு பதில் தகுதி தேர்வு அடிப்படையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

The post ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை 58ஆக உயர்த்தியது வரவேற்கத்தக்கது: பாமக நிறுவனர் ராமதாஸ் appeared first on Dinakaran.

Related Stories: