இந்தியா கனடா உறவு கடினமான கட்டத்தில் உள்ளது: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து

புதுடெல்லி: இந்தியா கனடா இடையேயான உறவு மிகவும் கடினமான கட்டத்தில் உள்ளதாக ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி கொல்லப்பட்ட விவகாரத்தால் இந்தியா, கனடா பிரச்னை தீவிரம் அடைந்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: இந்திய விவகாரங்களில் கனடா தூதரக அதிகாரிகள் தலையிட்டதால், வியன்னா ஒப்பந்தப்படி தூதரக அதிகாரிகள் விஷயத்தில் சமநிலையை கடைப்பிடிக்க 41 பேரை வௌியேறும்படி கூறினோம். இந்தியா-கனடா உறவு மிக சிக்கலாக கட்டத்தில் உள்ளது. கனடாவில் உள்ள மக்களுக்கும், இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் கனடா மக்களுக்கு மீண்டும் விசா வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

டோவால் கனடா பெயர் கெட்டு விட்டது கனடா கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பிர்ரெ பொலிவிரெ கூறியதாவது, “இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்தியாவுடன் கனடாவுக்கு தொழில்முறை உறவு தேவை. ட்ரூடோவால் இந்தியாவில் கனடாவின் பெயர் கெட்டு விட்டது. ” என்று விமர்சித்துள்ளார்.

The post இந்தியா கனடா உறவு கடினமான கட்டத்தில் உள்ளது: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: