மழை இல்லாததால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைவு

கூடலூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சில தினங்களுக்கு முன் மழை பெய்ததால், நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது. இந்நிலையில், மழை நின்றதால், அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,884 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று வினாடிக்கு 1,189 கனஅடியாக குறைந்தது. 152 உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 123.65 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1189 கனஅடி. அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1322 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 3351 மில்லியன் கனஅடி.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 58.14 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,445 கனஅடி. அணையில் இருந்து வினாடிக்கு 69 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 3254 மில்லியன் கனஅடி. 126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 123.98 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 25.9 கனஅடி. அணையில் இருந்து வினாடிக்கு 3 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் இருப்பு நீர் 96.32 மில்லியன் கனஅடி. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 76 கனஅடி. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 100 கனஅடி. அணையின் இருப்புநீர் 433.28 மில்லியன் கனஅடி. மழை எங்கும் பதிவாகவில்லை.

The post மழை இல்லாததால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைவு appeared first on Dinakaran.

Related Stories: