ஊட்டி சுற்றுலா மையத்தை சுற்றி பார்க்க சைக்கிள் வசதி


ஊட்டி: ஊட்டி கேர்ன் ஹில் சூழல் சுற்றுலா மையத்தை சைக்கிள் மூலம் சுற்றி பார்க்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த கேர்ன் ஹில் வனப்பகுதியில் சூழல் சுற்றுலா மையம் மற்றும் வனத்துறை விரிவாக்க மையம் உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு விலங்குகளின் உருவங்கள் அடங்கிய பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. தொங்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பறவைகளின் சத்தங்களை கேட்கும் வகையில், இங்கு நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன் மட்டுமின்றி அதன் ஒலிகளையும் கேட்டு மகிழ்ந்து செல்கின்றனர்.

இந்நிலையில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக புதிதாக சூழல் மையத்தில் சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவருக்கு ரூ.200 வசூலிக்கப்படுகிறது. இந்த சைக்கிள் மூலம் கேர்ன் ஹில் சுற்றுலா மையத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியும். தற்போது இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த சைக்கிள்கள் மூலம் கேர்ன் ஹில் வனப்பகுதியை சுற்றி பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

The post ஊட்டி சுற்றுலா மையத்தை சுற்றி பார்க்க சைக்கிள் வசதி appeared first on Dinakaran.

Related Stories: