ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிறந்த நாள் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் கட்சி பேதமின்றி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, நேற்று அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உங்கள் வாழ்வில் நிலையான மகிழ்ச்சியும் நல்ல உடல்நலனும் நிறைந்திருக்கட்டும்.

The post ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிறந்த நாள் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: