சென்னை: இஸ்ரேலில் இருந்து ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு, சென்னை வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 பேரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்றார். 212 இந்தியர்கள் இன்று டெல்லி வந்தடைந்தனர். இதில், 21 தமிழர்களில் மீதமுள்ள 7 பேர் டெல்லியில் இருந்து நேரடியாக கோவைக்கு சென்றனர்.