சிங்காடிவாக்கம் ஊராட்சியில் சேதமடைந்த சிமென்ட் சாலை: சீரமைக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத்: சிங்காடிவாக்கம் ஊராட்சியில் சேதமடைந்த சிமென்ட் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்காடிவாக்கம் ஊராட்யில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், ஊராட்சியில் ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம், இ-சேவை மையம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு தனியார் தொழிற்சாலைகளும் இயங்குகின்றன. மேலும், இங்குள்ள கிராம மக்களின் பிரதான தொழிலாக விளங்குவது விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்தல்.

இந்த ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்கள் அனைத்தும் ஆங்காங்கே சிதலைமடைந்து கிராம மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இதுபோன்று ஊராட்சிக்குட்பட்ட பள்ளத்தெரு பகுதியில் சாலை முழுவதும் ஆங்காங்கே குண்டும், குழியுமாக மழைக்காலங்களில் சாலைகள் முழுவதும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு லாக்கியற்ற சாலையாக விளங்கி வந்தன.

இதனை ஊராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைத்து தரவேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதன்படி, இப்பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கடந்த மாதம் சிமெண்ட் சாலை போடப்பட்டன. தற்போது இந்த சிமென்ட் சாலை முழுவதும் சிதிலமடைந்து காணப்படுவதால், இப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கடந்த மாதம் ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் சிமென்ட் சாலையாக போடப்பட்டது. இந்த சிமென்ட் சாலை போடப்பட்ட ஒரே மாதத்தில் முழுமையாக பெயர்ந்து ஒருசில மாதங்களில் சாலையே இல்லாதநிலை ஏற்படும் சூழல் நிலவுகின்றன. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தாலே பல லட்சங்கள் மதிப்பீல் போடப்பட்ட சிமென்ட் சாலை வீணாகியுள்ளது’ என்றனர்.

The post சிங்காடிவாக்கம் ஊராட்சியில் சேதமடைந்த சிமென்ட் சாலை: சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: