பெரம்பலூர் மாவட்டத்தில் வரும்15ம்தேதி தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு

பெரம்பலூர்: வருகிற 15ம்தேதி 11ம் வகுப்பு மாணவ,மாணவியருக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு நடைபெறுகிறது. இதில் 13மையங்களில் 3,250பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பெரம்பலூர் மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் (பொ) விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பாக 11-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு, தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு வருகிற 15ம் தேதி நடை பெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, ஆதிதிராவிடர், அரசு உதவி பெறும், தனியார், மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிக ளைச்சேர்ந்த 11ம் வகுப்பு மாணவமாணவியர் இந்தத் தேர்வினை எழுதலாம். தமிழக அளவில் நடைபெறும் இந்தத் தேர்வில் மொத்தம் 1500 பேர் ஊக்கத் தொகைபெற தகுதி பெறுவர். அரசு பள்ளிகளை சேர்ந்த 750 மாணவ மாணவியர் மற்றும் இதர அனைத்து வகை பள்ளிகளை சேர்ந்த மாணவ,மாணவியர் 750 பேர்களுக்கும் மாதாந்திர ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவியருக்கு 2 ஆண்டுகளில், 2-மே மாதங்கள் தவிர மொத்தம் 22 மாதங்க ளுக்கு மாதம் ரூ.1500 என மொத்தம் 33,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இந்தத் தேர்வினை எழுத பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 92 அனைத்து வகை மேல் நிலைப் பள்ளிகளில் இருந்து, 11ம் வகுப்பில் படிக்கும் 3,250 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் வரும்15ம்தேதி தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: