கும்மிடிப்பூண்டி பள்ளி மாணவன் தேசிய யோகாசன போட்டிக்கு தேர்வு

கும்மிடிப்பூண்டி: அகில இந்திய அளவில் நடைபெறும் யோகாசனப் போட்டிக்கு 6ம் வகுப்பு படிக்கும் மாணவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் பகுதியைச் சேர்ந்தவர் சீத்தேஷ்(11). இவர், இதே பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலேயே யோகாவில் ஆர்வம் கொண்ட சீத்தேஷ், கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் யோகா மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற யோகாசனப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் நேற்றுமுன்தினம் ஒரு தனியார் பள்ளியில் யோகாசனப் போட்டி நடந்தது. மேலும், பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில், கும்மிடிப்பூண்டி அருகே எளாவூரை சேர்ந்த பள்ளி மாணவன் சீத்தேஷ் பங்கேற்று, தனது யோகாசன திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில் நடைபெறும் தேசிய அளவிலான யோகாசனப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இதற்காக, அன்று மாலை கும்மிடிப்பூண்டியில் யோகாசன போட்டியில் தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவன் சீத்தேஷுக்கு பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

The post கும்மிடிப்பூண்டி பள்ளி மாணவன் தேசிய யோகாசன போட்டிக்கு தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: