இதில் நாகநதி கூட்ரோட்டில் இருந்து அமிர்தி பூங்கா வரை உள்ள சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் தற்போது சாலை முழுவதும் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை சேரும் சகதியுமாக மாறியுள்ளது. இதன் காரணமாக அதிகளவில் விபத்துகளும் நடக்கிறது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் மக்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். மேலும் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
இந்த வழியாக செல்லும் நாகநதி, மேதல்பாடி, வேடகொல்லைமேடு, நஞ்சுகொண்டாபுரம், அமிர்தி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அமிர்தி சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை வனத்துறை மற்றும் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த நஞ்சுகொண்டாபுரம் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று அமிர்தியில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி கோஷமிட்டனர். இதற்கிடையில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கன்னியப்பன் பெட்ரோல் கேனுடன், சாலைமறியல் நடந்த இடத்திற்கு வந்தார். அங்கிருந்த போலீசார் அவரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையேற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
The post கணியம்பாடி அருகே சாலையை சீரமைக்க ேகாரி பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல் appeared first on Dinakaran.
