போக்குவரத்து கழகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: ‘அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்’ என்று முதல்வரை, எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் தினசரி தங்களது வேலைக்காக செல்லும் கோடிக்கணக்கான மக்களுக்காக இயங்கி வரும் போக்குவரத்துக் கழகங்கள், ஒரு சேவைத் துறை என்ற கொள்கை முடிவோடு இயங்கி வருகின்றன. இவற்றுக்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தேர்வுக்கு விளம்பரம் செய்யப்பட்டதை பார்த்து ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து உள்ளனர்.

ஆனால், தனியார் ஏஜென்சி மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசு முயல்கிறது. இதற்காக வெளியிட்ட ஒப்பந்தப் புள்ளியை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும். பதிவு செய்துள்ள சுமார் 1,087 வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ள விண்ணப்பங்களை பரிசீலித்து நேர்மையான முறையில் தமிழகத்தில் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post போக்குவரத்து கழகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப எடப்பாடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: