கடந்த 7 நாட்களில் சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட 15 பேர் கைது

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரமாக தொடர் வாகன திருட்டு மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 15 வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 செல்போன்கள் மற்றும் 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை மாநகர காவல் எல்லையில் தொடர் வாகன திருட்டு மற்றும் செல்போன் போன்ற வழிப்பறிகளில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை முழுவதும் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 24ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலான 7 நாட்களில் பதிவான வாகனங்கள் திருடப்பட்ட வழக்குகளில், 2 வழக்குகளில் தொடர்புடைய 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1 இருசக்கர வாகனம் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், செல்போன் பறிப்பு மற்றும் திருட்டு தொடர்பான 7 வழக்குகளில் தொடர்புடைய, 13 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 12 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் பணம் ரூ.2,450 பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், சென்னை முழுவதும் கடந்த 7 நாட்களில் திருட்டு மற்றும் வழிப்பறில் ஈடுபட்டதாக 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 15 செல்போன்கள், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post கடந்த 7 நாட்களில் சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்ட 15 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: