நிலக்கோட்டை: ஜம்புத்துரைக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பூதிபுரத்தில் ரூ.5 லட்சத்தில் கால்வாயுடன் கூடிய சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் அரசுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜம்பதுரைக்கோட்டை ஊராட்சியில் 2 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ள சுமார் 15 குக்கிராமங்கள் 12,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் மிகப்பெரிய ஊராட்சி பகுதியாகும். இங்கு பெரும்பாலும் விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் விவசாயிகள், ஏழை எளிய விவசாய கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி மன்றத் தலைவரான பவுன்தாய் காட்டுராஜா பொதுமக்களின் தேவையறிந்து ஒன்றிய, மாநில அரசு நிதிகளை பெற்று அடிப்படை வசதிகளை செய்து தருவதில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் ஒருபுரம் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவகையில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும், மறுபுறம் பெரிய நகரங்கள்,பெரிய கிராமங்கள், அதிகளவிலான மக்கள் வசிக்கும் பகுதிகள் என பிரித்து பார்க்காமல் குறைந்த அளவு வசிக்கும் குக்கிராமங்களுக்கு கூட தமிழக அரசின் திட்டங்கள் மூலம் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட வெறும் 50-குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் பூதிப்பூர கிராமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ரூ.5 லட்சத்தில் கழிவு நீர் கால்வாயுடன் கூடிய சாலை, தனித்தனி குடிநீர் குழாய் வசதி மற்றும் கழிவுநீர் தேங்கிய தொற்றுநோய் ஏற்படாதவண்ணம் பிரமாண்ட உறிஞ்சுகுழி உள்ளிட்ட அடிப்படை பணிகளை மழைக்காலம் துவங்குவதற்கு முன் செய்து முடிக்க போர்க்கால அடைப்பிலான வேகத்தில் பணிகள் செய்யப்பட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து ராஜா கூறுகையில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் தோட்ட குடியிருப்பாக வெரும் 10-முதல் 20 குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்தோம், நாளடைவில் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக தற்போது 50க்கும் மேற்பட்ட குடும்பமாக பெருகி பூதிப்புரம் என்ற குக்கிரமமாகவும், ஒரே தெருவாக இரு புறங்களிலும் அடுத்தடுத்த வீடுகளாக கட்டப்பட்டு வசித்து வருகிறோம். தனித்தனி பட்டா இடங்களில் வசித்து வந்தாலும், கழிவுநீர் கால்வாய்,சாலை வசதி, தெருவிளக்கு மற்றும் குடிநீர் வசதி இன்றி அல்லப்பட்டு, இரவு நேரங்களில் பாம்பு பூச்சி பள்ளிகளுக்கு பயந்து அஞ்சி வாழ்ந்து வந்தோம். கழிவுநீர் வாய்க்கால் இல்லாததால் தெருக்களிலேயே கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவி வந்தது.
இந்நிலையில் எங்கள் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ஊராட்சி மன்ற தலைவரின் முயற்சியால் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் உதவியோடு சுமார் 5 லட்சம் மதிப்பில் கழிவு நீர் கால்வாயுடன் கூடிய சாலை, தனி தனி குடிநீர் குழாய் வசதி, புதிய தெரு விளக்கு மற்றும் கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் ஏற்படாத வகையில் பிரமாண்ட உறிஞ்சி குழி உள்ளிட்டவைகள் அமைக்கும் பணிகள் வரும் மழைக்காலத்திற்கு முன் செய்து முடித்திட வேண்டும் என்ற முனைப்புடன் போர்க்கால அடிப்படையான பணிகள் வேகமாக நடைபெற்று வருவது மிகுந்த மகிழ்ச்சி செய்யும் வரவேற்பை பெற்றுள்ளது. பெரிய நகரங்கள் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகள், பெரிய கிராமம் என பாகுபாடு இன்றி குக்கிராம மக்களும் பயனடையும் வகையில் நிதி ஒதுக்கி அடிப்படை தேவைகளை செய்து வரும் தமிழக அரசுக்கு எங்களது கிராம பொதுமக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.
The post ஜம்புத்துரைக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பூதிபுரத்தில் ரூ.5 லட்சத்தில் கால்வாயுடன் கூடிய சாலை வசதி: அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் அரசுக்கு பாராட்டு appeared first on Dinakaran.