×

ரூ.330 கோடி திட்டம் தயாரிப்பு அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சி: குடமுருட்டி முதல் பஞ்சப்பூர் வரை கோரையாறு கரையை பலப்படுத்த 330 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சி தில்லைநகா் மக்கள் மன்றத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் முன்னிலையில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் ‘ரோபோட்டிக்’ பிரசார வாகனத்தை கொடியசைத்து துவங்கி வைத்து, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பழைய துணிகளை கொடுத்து பைகளாக கட்டணமின்றி பெறும் சேவையை நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சா் கே.என்.நேரு கூறியதாவது: ‘SWACHHATA HI SEVA’ இயக்கத்தின் ஒரு பகுதியாக அக்.1 அன்று ‘இ.சா்குலா் வேஸ்ட் சொலுசன்ஸ்’ எனும் திட்டம் (Mitigation Action Facility-ன் கீழ் GIZ நிறுவனம், திருச்சி மாநகராட்சி மற்றும் சாஹாஸ் தொண்டு நிறுவனம் ஆகியன இணைந்து செயல்படும் அமைப்பு) இரண்டு புதிய முயற்சிகளை அறிமுகம் செய்துள்ளது. இது திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகள் குறித்து திருச்சி மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கத்திலான முயற்சியாகும். மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு தாய் மற்றும் மகனைப் போல் வடிவமைக்கப்பட்ட இரண்டு ரோபோக்கள், நிலையான நகராட்சி திடக்கழிவு மேலாண்மை குறித்து உரையாடல்களில் ஈடுபடும். இந்த முயற்சியின் நோக்கமானது, குப்பைகளை தரம் பிரிப்பதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகளை மக்களுக்கு தொிவிப்பதும், முறையற்ற கழிவு மேலாண்மை சுற்றுச்சூழலுக்கு எவ்வாறு பிரச்சனைகளை வழிவகுக்கும் என்பதை எடுத்து கூறுவதுமாகும். இந்த வாகனமானது திருச்சியில் உள்ள 65 வார்டுகளுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்த அனுப்பப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தொிவித்தார்.

The post ரூ.330 கோடி திட்டம் தயாரிப்பு அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,KN Nehru ,Trichy ,Korayar ,Kudamurutti ,Panjapur ,
× RELATED தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்...