×

மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா

 

ஈரோடு, அக்.2: ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 96வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட முன்னாள் தலைவர் ஈ.ஆர்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ஜே.பி. கோதண்டபாணி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில துணைத் தலைவர் எம்.ஜவஹர் அலி, மண்டல தலைவர்களான ஆர்.விஜயபாஸ்கர்,எச்.எம்.ஜாபர் சாதிக், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணை தலைவர் கே. என்.பாஷா, மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணவேணி, முன்னாள் மாமன்ற உறுப்பினர் அன்னபூரணி, வாட்டர் சிவாஜி கணேசன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி வள்ளிபுரத்தாம்பாளையம் எஸ்.தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Tags : Sivaji Ganesan ,Metropolitan District Congress ,Erode ,Thilakam Sivaji Ganesan ,Erode Municipal District Congress ,Municipal District Congress ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் இந்திரா காந்தி பிறந்தநாள் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்