அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்: சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: 2011-15ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்ட 46 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 2015ம் ஆண்டு வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், வழக்கை விசாரித்து விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவுக்கு காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து விசாரணை நடத்திய காவல்துறை, செந்தில் பாலாஜிக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து வழக்கை 5ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்: சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: