இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தணிக்கை வாரியம் அளித்துள்ள விளக்கத்தில் திரைப்பட தணிக்கையில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்கவே இ-சினிபிரமான் என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. ஆனால், பல திரைப்பட தயாரிப்பாளர்கள் இடைத்தரகர்களை அணுகுவதாகவும் அவ்வாறு தணிக்கை வாரியத்தின் பெயரில் யாரவது பணம் கேட்டால் புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் விஷாலின் புகார் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் வெளியீட்டிற்கு முன்கூட்டியே தணிக்கை சான்றுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அவரசர தேவைக்கு தணிக்கை வாரிய உயர் அதிகாரிகளை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post மும்பை தணிக்கை அதிகாரிகள் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டனர்: நடிகர் விஷால் புகாருக்கு திரைப்பட தணிக்கை வாரியம் விளக்கம் appeared first on Dinakaran.
